சண்டிகார்:

காங்கிரஸை குற்றஞ்சாட்டுவதன் மூலம் பிரதமர் மோடி தப்பிக்க முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.


ஹரியானாவில் நடந்த இடதுசாரிகளின் பேரணியில் கலந்து கொண்டு பேசிய சீதாராம் யெச்சூரி, “மோடியின் ஆட்சியில் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது ஏன்? தனது தவறை மறைக்க காங்கிரஸ் மீது குற்றஞ்சாட்டுவது எல்லாம் நடக்காது.

காங்கிரஸ் செய்த தவறுகளுக்குத்தான் மக்கள் அவர்களை தண்டித்து விட்டனர். அதன்பின் உங்களிடம் ஆட்சியை கொடுத்தனர். இப்போது மீண்டும் காங்கிரஸ் மீது குற்றஞ்சாட்டி தப்பிக்க முடியாது.

தேச சொத்துகள் அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றன. தேச சொத்துகளை தன் கார்பரேட் நண்பர்களுக்கு கொடுத்துள்ளார் மோடி. இதனால், நாட்டின் 73% சொத்துகள் வெறும் ஒரு சதவீதத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பால்கோட் விமான தாக்குதலை அரசியல் லாபத்துக்கு பயன்படுத்த பாஜக முயற்சிக்கிறது என்றார்.