புதுடெல்லி:

சுவிட்சர்லாந்தில் சிறுவனிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக, பிஎம் நரேந்திரமோடி படத்தின் தயாரிப்பாளர் சந்தீப் சிங் மீது புகார் தரப்பட்டுள்ளது.

சந்தீப் சிங், விவேக் ஓபராய், ஓமங்க் குமார்.

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய படம் பிஎம் நரேந்திர மோடி. இந்த படத்தின் போஸ்டரில் பாடலே எழுதாத ஜாவேத் அக்தரின் பெயர் இடம்பெற்றிருந்தது. இதனை அறிந்து ஜாவேத் அக்தர் அதிர்ச்சியடைந்தார்.

இந்நிலையில், பிஎம்.நரேந்திர மோடி திரைப்படத்தின் தயாரிப்பாளர் சந்தீப் சிங் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. திரைப்படம் சம்பந்தமாக கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்த் சென்றிருந்தார்.

அங்குள்ள ஓட்டல் ஒன்றில் குடும்பத்துடன் தங்கியிருந்த சிறுவனிடம் நண்பராக பழகியுள்ளார். இருவரும் ஒன்றாகவே சென்றனர்.

ஒருநாள் தன் அறைக்கு அழைத்துச் சென்று அந்த சிறுவனிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் சந்தீப்சிங். அங்கிருந்து தப்பியோடி வந்து, நடந்ததை தந்தையிடம் கூறினான் சிறுவன்.

விரைந்து வந்து ஓட்டல் வரவேற்பறையில் இருந்த ஊழியர்களிடம் சிறுவனின் தந்தை தகவலை சொன்னார். ஆனால், அவர்கள் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்தனர்.
இது குறித்து காவல்துறையில் சிறுவனின் தந்தை புகார் கொடுத்தார். அதன்பின்னர் அந்த ஓட்டலில் இருந்து சந்தீப் சிங் தப்பி ஓடிவிட்டார். மறுநாள் இரவு விமானம் மூலம் இந்தியாவுக்கு திரும்பியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.