ஏற்றச்சொன்னது விளக்கை  மாசுபடுத்தியது காற்றை..


’எள் என்பதற்குள் எண்ணெய்யாக்குவது’’ கட்சி தொண்டர்களுக்கு அழகு தான்.

ஆனால் சில நேரங்களில் எல்லை மீறிப்போனால்

என்ன ஆகும்?

இது தான் நடக்கும்.

கொரோனாவை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வீட்டுக்குள் விளக்கு ஏற்றச் சொன்னார், பிரதமர் மோடி.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அப்படியே செய்தார்கள், நாட்டு மக்கள்.

சில இடங்களில் ஆர்வக்கோளாறு காரணமாகப் பட்டாசுகளை வெடித்து, அதிர வைத்தனர், மோடியின் ஆதரவாளர்கள்.

டெல்லியில் பட்டாசு சத்தம் கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது.

9 மணிக்கு ஆரம்பித்த ’ஒலியும்,ஒளியும்’ 11 மணிக்குத்தான் அடங்கியது.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், தொழிற்சாலைகள் இயங்கவில்லை. பேருந்துகள் ஓடவில்லை.

இதனால் ,டெல்லியில் சுத்தமான காற்றை நீண்ட நாட்களுக்குப் பின்னர் சுவாசித்தனர், மக்கள்.

இந்த வெடிப்பு வைபவம், ‘கிர்ரென்று’ காற்று மாசுவை அதிகரித்து விட்டது.

சில இடங்களில் தீபாவளி பட்டாசுகள் வெடிக்கும் போது ஏற்படும் அளவுக்கு, காற்று மாசு ஏற்பட்டுள்ளதாகக் காற்று மாசு தடுப்பு ஆர்வலர்கள் புலம்புகிறார்கள்.

– ஏழுமலை வெங்கடேசன்