ண்டன்

ண்டன் சென்றுள்ள பிரதமர் மோடி பாலியல் வன்கொடுமை பிரச்னைகளை அரசியல் ஆக்க வேண்டம் எனக் கூறி உள்ளார்.

லண்டன்

பிரதமர் மோடி காமன்வெல்த் மாநாட்டில் கலந்துக் கொள்ள தற்போது இங்கிலாந்து சென்றுள்ளார்.   அங்கு அவருக்கு இந்திய வம்சாவழியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.   கத்துவா மற்றும் உன்னாவ் பகுதிகளில் நடந்த பலாத்கார நிகழ்வுகளுக்காக் அவர்கல் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.    பிரதமர் மோடி நேற்று லண்டனில் உள்ள இந்திய வாழ் மக்களிடம் பேசினார்.

லிங்காயத்து தலைவர் சிலைக்கு மாலை அணிவித்த மோடி, “பாலியல் பலாத்காரம் என்பது கண்டிக்கத்தக்கது.   நமது மகள்களிடம் தவறாக நடப்பவர்களை நாம் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?  அல்லது மற்ற அரசுகளில் நடந்த பலாத்காரங்களுடன் நமது மகளுக்கு நேர்ந்த கொடுமையை ஒப்பிட முடியுமா>  எனவே மற்றவர்கள் ஆண்ட போது அதிக பலாத்கார சம்பவங்கள் இருந்தன என நான் கூற மாட்டேன்.  இந்த விவகாரத்தில் அது போல ஒரு தவறை நான் செய்யமாட்டேன்.

பலாத்காரம் செய்யப்பட்ட பெண் நமது மகள் என்றால் பலாத்காரம் செய்த ஆணும் ஒரு பெற்றோருக்கு மகன் தானே?  நாம் நமது மகள் வீட்டுக்கு தாமதமாக வந்தால் கேள்விகள் எழுப்புவது போல் மகனிடமும் கேட்க வேண்டும்.    அதில் நாம் தவறுவதால் தான் பெண்களுக்கு கொடுமைகள் நேரிடுகின்றன.    பலாத்காரக் குற்றம் புரிந்தவர்கள் அவசியம் தண்டனை அடைவார்கள்.   தயவு செய்து இந்த மாதிரியான பாலியல் வன்கொடுமை பிர்ச்சினைகளை அரசியலாக்க வேண்டாம்”  என உரையாற்றி உள்ளார்.