பெல்லாரி

சுரங்க ஊழலில் சம்மந்தப்பட்ட ரெட்டி சகொதரருடன் பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டார்.

கர்நாடகாவின் பெல்லாரி பகுதியில் இரும்புத் தாது அதிகமாக உள்ளது.  இந்த இரும்பு தாது அமைக்க சட்ட விரோதமாக சுரங்கங்கள் அமைத்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன்னாள் பாஜக அமைச்சர் ஜனார்தன ரெட்டி மற்றும் அவருடைய சகோதர்கள் ஆவார்கள்.   கடந்த தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததற்கு ரூ.35000 கோடி மதிப்பிலான இந்த ஊழலே காரணம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஜனார்த்தன் ரெட்டியின் சகோதரர்களான கருணாகர ரெட்டி மற்றும் சோமசேகர ரெட்டிக்கு கர்நாடகா தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு அளித்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.   அரசியல் விமர்சகர்கள் பலரும் பாஜக ஊழல் வாதிகளுக்கு துணை போவதாக குற்றம் சாட்டினர்.   கட்சியின் வெற்றிக்கு இது அவசியம் என பாஜக காரணம் கூறியதை பாஜகவினரே ஏற்றுக் கொள்ளவில்லை.

நேற்று பெல்லாரி தொகுதியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டார்.   மாவட்ட விளையாட்டு அரங்க மைதனத்ஹ்டில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அவருடன் ஜனார்த்தன் ரெட்டியின் சகோதரர் சோமசேகர ரெட்டி ஒரே மேடையில் தோன்றினார்.  இது மக்களிடையே கடும் பரப்பரப்பை உண்டாக்கி இருக்கிறது.