டெல்லி:

பிரதமர் மோடியின் கொள்கையால் ‘YES’ வங்கி ‘NO’ வங்கியானது என காங்கிரஸ் எம்.பி.  ராகுல்காந்தி காட்டமாக விமர்சித்து டிவிட் போட்டுள்ளார்.

நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த தனியார் வங்கியான YES BANK நிர்வாகத்தை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது. அதைத்தொடர்ந்து, அதில் டெபாசிட் செய்துள்ள  வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன.

பெரு நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட கடன், வாராக்கடன்களாக மாறிய நிலையில் கடந்த 2018ம் ஆண்டு லாபத்தில் இயங்கி வந்த நிலையில் கடந்த ஒரே ஆண்டில் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இது கடும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது.

இதுமுன்னாள் காங்கிரஸ் தலைவரும், தற்போதைய எம்.பி.யுமான ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்து உள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில்,

பிரதமர் நரேந்திர மோடியும் அவரது கொள்கைகளும் நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்து விட்டன. இதன் காரணமாகவே யெஸ் வங்கி நோ வங்கியாகிவிட்டது என்று காட்டமாக தெரிவித்து உள்ளார்.