சென்னை:

தேசிய கட்சிகள் கடைபரப்பி உள்ள தலைநகர் டெல்லியில், மாநிலக்கட்சியான ஆம்ஆத்மி கட்சி 3வது முறையாக இமாலாய  வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பெரும் வெற்றி பெற்று 2வதுமுறையாக ஆட்சியை பிடித்த பாரதியஜனதா கட்சி, அதன்பின்பு நடைபெற்ற சில மாநிலங்களின் சட்டமன்றதேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில், பிரதமர் மோடி உள்பட பாஜக மூத்த தலைவர்கள், மத்தியஅமைச்சர்கள்  முகாமிட்டும் வாக்குச்சேகரித்தும், வரலாறு காணாத தொல்வியை சந்தித்துள்ளனர்.

டெல்லி தேர்தல் முடிவுகளை  காணும் மோடி, அமித்ஷாவின் ரியாக்சன்…..

எப்போதும்போல, டெல்லியிலும் மாற்றம் (மாஜிக்)  நடைபெறும் என கூறிவந்த  பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு, இன்று வெளியாகி வரும் தேர்தல் முடிவுகள் அவர்களின் முகத்தில் குத்துவிட்டுள்ளது.  தலைநகரிலேயே மக்கள் அவர்களை துடைப்பத்தால் சாத்து சாத்து என சாத்தி விரட்டியடித்து உள்ளனர்… பாஜக தோல்வி காரணமாக, அங்குள்ள பாஜக தலைமையகமே வெறிச்சோடி கிடக்கிறது.

பாஜக தலைவர்களோ,  செய்தித்தொடர்பாளர்களோ இல்லாத நிலையில்,  பாஜக வெற்றிபெறும் என்ற ஆசையில் பட்டாசுடன் வந்த தொண்டர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்…

அதே வேளையில் ஆம்ஆத்மி கட்சித் தொண்டர்கள் செம ஹாப்பியாக உள்ளனர். ஆடல் பாடல்  மற்றும் மேளதாளத்துடன் ஆம்ஆத்மி அலுவலகம் களைகட்டி உள்ளது.

டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி 57 இடங்களிலும், பாஜக 13 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.