சென்னை: தமிழகத்தில் நடமாடும் ரேஷன் கடைகள் அடுத்த மாதம் தொடங்கப்படும் என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
கடந்த 13ந்ததி தமிழகஅரசு, இது தொடர்பாக அரசாணை வெளியிட்டிருந்தது. அதில், ரூ.9.66 கோடி யில் 3,501 நடமாடும் அம்மா ரேசன் கடைகளை திறக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தது.
இன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, தமிழகத்தில் உள்ள4449 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. அவை அனைத்தும் கணிணி மையம் ஆக்கப்பட்டுள்ளது. இதனால், இனிமேல் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரங்கள் மற்றும் விவசாய பொருட்கள் தடையின்றி கிடைக்கும் என்றார்.
மேலும், ரேசன் கடைகளில் கூட்டம் அதிகரிப்பு மற்றும் ரேசன் கடைகள் அமைக்க இடங்கள் கிடைக்காத நிலை காரணமாவே, நடமாடும் ரேசன் கடைகள் திட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டம், அடுத்த மாதம் அமலுக்கு வரும், இதனால் ரேசன் கடைகள் மூடப்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.