டில்லி

க்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நாடாளுமன்ற நேரடி ஒளிபரப்பை காண மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற நிகழ்வுகளை வெளிப்படைத் தன்மையுடன் அனைவரும் பார்க்க ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்னும் கோரிக்கை வெகு நாட்களாக உள்ளது.   தற்போது தூர்தர்ஷன் மூலம் நாடாளுமன்ற நிகழ்வுகள் ஒளிபரப்பப் படுகின்றன.   ஆயினும் தொலைக்காட்சி இல்லாமல் அவற்றைக் காண முடிவதில்லை

இந்நிலையில் நேற்று மக்களவையில் சபாநாயகர் இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதன்படி நாடாளுமன்ற அலுவல்களின் நேரடி ஒளிபரப்பை அனைவரும் காண மொபைல் செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளதாக ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

மேலும் அவர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் மொபைலில் அந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும் தங்கள் தொகுதி மக்களையும் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.