கோமாலி, பப்பி மற்றும் வாட்ச்மேன்; போன்ற தமிழ் மற்றும் கன்னட படங் களில் நடித்திருப்பவர் சம்யுக்தா ஹெக்டே.
பெங்களுருவில் உள்ள ஒரு பார்க்கில் அரைகுறை ஆடையுடன் இடுப்பில் வளையம் மாட்டிக்கொண்டு சுழன்று நடனம் ஆடும் உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்தார். நடிகையுடன் அவரது தோழிகளும் வந்திருந் தனர்.


மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பார்க்கில் அரைகுறை ஆடையுடன் சம்யூக்தா பயிற்சி செய்வதை பார்த்த வர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு பெண்ணும் இன்னும் சில இளைஞர் களும் சம்யுக்தாவிடம் தகராறில் ஈடுபட்ட னர். இதுபோல் ஆபாசமாக பொது இடத்தில் நடனம் ஆடக்கூடாது, இவரைப்போன்ற நடிகைகளால்தான் போதை மருத்தை ஊக்குவிக்கிறார்கள் என்றனர். அதைக் கேட்டதும் கோபம் அடைந்த சம்யுக்தா அவர்களிடம் வாய்த் தகராறில் ஈடுபட்டார்.
சமபந்தமே இல்லாமல் நடிகை என்றதும் போதை மருந்தை தொடர்புபடுத்தி பேசுவது ஏன் என்றார். அந்த இடத்துக்கு போலீசாரும் வந்தனர். அவர்கள் சம்யுக்தாவை அங்கிருந்து கிளம்பும்படி கூறினர். அதற்கு சம்யுக்தா மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் சம்யுக்தாவின் தோழியை அங்கிருந்த பெண் தாக்கினார். கூட்டத்தினரும் சம்யுக்தாவை விரட்ட தொடங்கினர். அவர்கள் வெளியில் செல்ல முயன்றபோது பார்க் கேட் பூட்டப்பட்டி ருப்பது தெரிந்தது, அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சம்யுக்தா பூட்டை திறக்கும்படி கேட்டார். நீண்ட வாக்குவதாத்திற்குபிறகு பூடை திறந்து அவரை வெளியில் அனுப்பினர்கள்.
இந்த சம்பவங்களை வீடியோவாக பதிவு செய்து சம்யுக்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

https://www.instagram.com/tv/CEtwP4plMhN/?utm_source=ig_embed