சென்னை: சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நிர்வாகிகளிடம் திடீர் ஆலோசனை நடத்தினார்.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி என தொடர்ந்து சுழன்று வருகின்றன. அதே வேளையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4வது ஆண்டு தொடக்க விழா மாநாடு பிப்ரவரி 21ம் தேதி சென்னையில் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.
இந் நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் நிர்வாகிகளிடம் அவர் முக்கிய ஆலோசனை நடத்தினார். நாளை மறுநாள் நடைபெறவுள்ள பொதுக்குழு மற்றும் 21ம் தேதி நடைபெற இருக்கும் மாநாட்டு பணிகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Patrikai.com official YouTube Channel