சென்னை:
னி பெருமையுடன் திமுக தொண்டனாக இருப்பேன் என்று டாக்டர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் நிர்வாகி டாக்டர் மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

இன்று அவர் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அது போல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மகேந்திரன் திமுகவில் இணைந்தார். இதன் மூலம் இரு மாத கால இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்த நிகழ்வில் ஆர் எஸ் பாரதி, துரைமுருகன், டிஆர் பாலு, கே என் நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பெரியாரின் சுயமரியாதை சித்தாந்தங்களையும்,
அண்ணாவின் மாபெரும் தமிழ்க்கனவையும்
தொடர்ந்து சுமந்து சென்ற
சுயமரியாதை சூரியன் கலைஞர் அவர்களின் பாதையில்,
கழகத்தலைவரும், தமிழக முதல்வருமான மாண்புமிகு திரு. மு.க.ஸ்டாலின்
அவர்களின் தலைமையில்… இனி பெருமையுடன் தொண்டனாக நானும்.. என்று குறிப்பிட்டுள்ளார்.