மக்கள் நலக் கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தனித்தனியாக செயல்படுவதாகவும், கூட்டணியில் பிளவு இல்லை எனவும் மதிமுக பொதுச்செயலாளரும் ம.ந.கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை மக்கள் நலக் கூட்டணி புறக்கணித்துள்ளது. மேலும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறது.
இந்த நிலையில் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி புதுச்சேரி நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அம்மாநில முதல்வர் நாராயணசாமிக்கு ஆதரவு அளித்துள்ளது. இந்த நிலைப்பாடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மக்கள் நலக் கூட்டணியில் பிளவு ஏற்பட்டதாக தகவல்கள் பரவின.
இந்த நிலையில், மக்கள் நலக் கூட்டணியினர் தமிழகம், புதுச்சேரியில் தனித்தனியாக செயல்படுகின்றனர் என்றும், மக்கள் நலக்கூட்டணயில் பிளவு ஏதும் இல்லை என்றும் அதன் ஒருங்கிணைபாளரும், மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ விளக்கம் அளித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel