ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இத தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக பிப்ரவரியில் இந்து ஏக்தா மஞ்ச் என்ற அமைப்பு ஊர்வலம் நடத்தியது. இதில், கத்துவா எம்.எல்.ஏ ராஜிவ் ஜஸ்ரோடியா கலந்து கொண்டார்.
பின்னர், கடந்த மாதமும் இதே போல் ஒரு ஊர்வலம் நடந்தது. இதில், மாநில பா.ஜ.க அமைச்சர்கள் 2 பேர்கலந்து கொண்டனர். எதிர்ப்பு கிளம்பியதால் இருவரும் ராஜினாமா செய்தனர். இந்நிலையில் காஷ்மீர் மாநில அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. நிர்மல் சிங்குக்கு பதிலாக கவிந்தர் குப்தா துணை முதல்வர் ஆனார். இவருடன் ராஜிவ் ஜஸ்ரோடியா புதிய அமைச்சராக இன்று பதவி ஏற்றார். இதற்கு முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
‘‘ஊர்வலத்தில் கலந்து கொண்ட அமைச்சர்களை நீக்கிவிட்டு, ஊர்வலத்தில் கலந்தகொண்ட எம்.எல்.ஏ ராஜிவ் ஜஸ்ரேடியா அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்’’ என்று அவர் தெரிவித்துள்ளார். இந்து ஏக்தா மஞ்ச் நடத்திய ஊர்வலத்தில் பங்கேற்க வில்லை என ராஜிவ் ஜஸ்ரோடியா தெரிவித்துள்ளார்.