
சென்னை:
கடந்த 9ம் தேதி அ.தி.மு.க., தென் சென்னை வடக்கு மாவட்ட செயலர், வி.பி.கலைராஜன் பேட்டி அளித்தபோது, “அதிமுக மீது கை வைத்தால் முதல்வர் ஓ.பி.எஸ். உடம்பில் கை இருக்காது” என்று வெளிப்படையாக மிரட்டல் விடுத்தார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கலைராஜன் மீது நடவடிக்கை கோரி, காஞ்சிபுரம் மத்திய மாவட்ட மாணவரணி இணை செயலரும், வழக்கறிஞருமான செல்லபாண்டியன், சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில், புகார் அளித்தார்.
இதையடுத்து ஆணையாளர் ஜார்ஜ் உத்தரவின் பேரில், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில், கலைராஜன் மீது, கொலை முயற்சி உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]