சென்னை: கட்சிக்காக உழைக்கும் சாதாரண தொண்டர்களுக்கும் எம்எல்ஏ சீட் வழங்கப்படும் என   தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின்  மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்  கூறி உள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணிகளை கட்சிகளை அறிவித்து, அவர்களுக்கான தொகுதிப் பங்கீட்டில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில்,   2026 சட்டமன்றத் தேர்தலில்  திமுக கூட்டணியில் இடம்பெற்றள்ள காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.  எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து இரு கட்சிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த  கிரிஷ் சோடங்கரிடம், அவர் காங்கிரஸ் அலுவலகத்தில் தவறி விழுந்தது குறித்து கேளவி எழுப்பினர். அதற்கு  பதிலளித்வர், “ தனக்கு கால் முறிவு ஏற்படவில்லை என்றும்,   அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டன. வெறும் சுளுக்கு தான். 4 – 5 நாட்கள் ஒய்வெடுத்தால் போதும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்,” என்றார்.

மேலும் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் உள்பட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தவர்,  “தமிழக ராஜ்யசபா உறுப்பினராக சாதாரண குடும்பத்தை சேர்ந்தவரை காங்கிரஸ் கட்சியில் நிறுத்தி உள்ளோம். அவர் வங்கி கணக்கில் கூட வெறும் 16 ஆயிரம் ரூபாய் மட்டுமே உள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சி எவ்வகையான வேட்பாளர்களை முன்னிறுத்துகிறது என்பதை பார்க்கலாம்.

இதுபோன்று தான் காங்கிரஸ் கட்சிக்காக உழைக்கக்கூடிய தொண்டர்களை சட்டமன்ற தேர்தலிலும் நிறுத்த உள்ளோம். அடிமட்ட தொண்டர்களையும் முன்னிறுத்துவதே எங்களது நோக்கம்” எனத் தெரிவித்தார்.

விஜயின் ‘ஜனநாயகன்’ படம் தொடர்பான  கேள்விக்கு, “இதுதொடர்பாக  விசாரணை நடைபெறவுள்ளது. ஆனால் அந்த விசாரணைக்கு விஜய் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஜனநாயகன் படத்தின் பிரச்சனை எழுந்தபோது, எங்கள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தோம். அது தமிழகத்தின் சினிமா உரிமை தொடர்பான ஒரு விஷயம் என்பதால் ஆதரித்தோம் எந்றார்.

காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியாகும். கட்சியின் மூத்த தலைவர்கள் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர். 28 தொகுதிகளிலும் 100 சதவீதம் வெற்றி பெற நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என்று கூறினார்.

[youtube-feed feed=1]