தமிழில் செம்பருத்தி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ரோஜா. 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர்.
தற்போது ஆந்திராவில் ஆட்சியில் இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் ரோஜா.
தற்போது ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக இருக்கும் ரோஜாவுக்கு கர்ப்ப பையில் பிரச்னை இருந்ததால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
கடந்த வாரம் அவருக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு ரோஜா மாற்றப்பட்டிருக்கிறார். இன்னும் 2 வாரங்கள் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.