சென்னை,

புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொள்ள சென்ற 3 திமுக எம்எல்ஏக்களை போலீசார் திடீரென கைது செய்தனர்.

இதை கண்டித்து வரும் ஞாயிற்றுக்கிழமை (11/6/17) அன்று புதுக்கோட்டையில் அதிமுக அரசை கண்டித்து போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்து உள்ளார்.

திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது,

புதுக்கோட்டையில் இன்று முதல்வரால் திறக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டடிடம் திறப்பு விழாவில் கலந்துகொள்ள முயன்ற அந்த பகுதி திமுக எம்எல்ஏக்களான புதுக்கோட்டை-பெரியண்ணன் அரசு, திருமயம்-ரகுபதி, ஆலங்குடி-மெய்யநாதன் உள்பட 100 க்கும் மேற்பட்ட  திமுகவினர்  போலீசாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதை கண்டித்து வரும் ஞாயிற்றுக்கிழமை (நாளை மறுதினம்) புதுக்கோட்டை தமிழக அரசை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.