சென்னை:
தயாளு அம்மாளின் 90வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி உள்ளிட்ட வருகை தந்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் தனது 90வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். தனது தாயார் தயாளு அம்மாளை நேரில் சந்தித்து ஆசி பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கோபாலபுரம் வீட்டிற்கு வருகை புரிந்தார். இன்று காலை 10:45 மணிக்கு மு.க ஸ்டாலின் கோபாலபுரம் வந்த அதே நேரத்தில் அவருடைய அண்ணன் மு.க அழகிரியும் வந்துள்ளார்.
மேலும் கனிமொழி, மு.க தமிழரசன், மற்றும் செல்வி ஆகியோரும் கோபாலபுரம் இல்லத்தில் நடைபெறும் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள வந்துள்ளனர். நீண்ட நாட்களாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் மு.க அழகிரியும் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த சந்திப்பு தற்போது நடைபெற்று உள்ளது.