புதுடெல்லி:
நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் நோட்டீஸை இன்று வழங்கியுள்ளது.

பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலமான தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு கடந்த 29-ந்தேதி மத்திய நிலக்கரி அமைச்சகம் அழைப்பாணை விடுத்துள்ளது.

இதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக மக்களைவையில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் நோட்டீஸை வழங்கியுள்ளார்.