சென்னை: அமைச்சர் தங்கமணியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 5 கட்டங்களாக ஜூன் 30 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 6ம் கட்டமாக ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நடைமுறையில் உள்ளது.
சென்னையில் மட்டும் அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னை தவிர்த்து 13 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் தங்கமணியுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் அமைச்சர் தங்கமணியை திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து உள்ளார். அவர் விரைவில் முழுநலத்துடன் வீடு திரும்ப வேண்டும் தான் தெரிவித்ததாகவும், பொதுப்பணிகளில் இருப்பவர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறி உள்ளார்.