சென்னை:
மிழகத்தில் மின்கட்டண உயர்வு குறித்து மாவட்டச்செயலாளர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், 4 மாதங்களுக் கும் சேர்த்து மின் கட்டணம் கணக்கிடப்பட்டதால், அதிக அளவிலான  மின் கட்டணம் தொகை வந்தது. இது வழக்கமானதைவிட அதிகமாக இருந்தால், சாமானிய மக்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.
ஆனால், மின்சாரா வாரியம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் , ஊரடங்கால் மக்கள் வீடுகளி லேயே இருந்ததால் மின்கட்டணம் உயர்ந்துள்ளது. இது தொடர்பான வழக்கும் தள்ளுபடியானது.
இந்த நிலையில்,  திமுக தலைவர் ஸ்டாலின், திமுக மாவட்டச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இது தொடர்பாக காணொளி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையின்போது,  மின்கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதிப்பு குறித்து கேட்டறிந்து வருகிறார்.