உரத் தட்டுப்பாட்டை போக்குவதற்கு அவசர நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களில் நிலவும் யூரியா தட்டுப்பாட்டால், விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்கள்.
மத்திய – மாநில அரசுகள் அலட்சியப் போக்கினைக் கைவிட்டு உரத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்!
— M.K.Stalin (@mkstalin) November 26, 2019
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை மேற்கொண்டுள்ள அவர், “தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களில் நிலவும் யூரியா தட்டுப்பாட்டால், விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்கள். மத்திய – மாநில அரசுகள் அலட்சியப் போக்கினைக் கைவிட்டு உரத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் !” என்று தெரிவித்துள்ளார்.