சென்னை: கொரானா நிவாரணம் உதவி தொகை ரூ.2000 வழங்கும் நிகழ்வை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.
‘தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்தபடி, கொரோனா பேரிடரால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு, முதல்கட்ட கொரோனா சிறப்பு நிவாரண நிதியாக ரூ.2000 வழங்கும் திட்டத்தினை இனறு தொடங்கி வைத்தார். அதன்படி தமிழகத்தில் அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு தமிழகஅரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரண நிதி ரூ.2ஆயிரம் வரும் 15ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரேசன் கடைகளில் கூட்டம் சேருவை தவிர்க்கும் வகையில், நாள் ஒன்றுக்கு 200 பேருக்கு நிதி வழங்கும் வகையில், டோக்கன் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.