சென்னை
செய்தி, ஒலி, ஒளி ஊடகங்களில் பணி புரிவோர் முன் களப் பணியாளர்களாக கருதப்படுவார்கள் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நடந்து முடிந்த தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்று தமிழக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அதிமுக கு|றைவான இடங்களில் வெற்றி பெற்றதால் ஆட்சியை இழந்துள்ளது. தமிழக முதல்வராக வரும் 7 ஆம் தேதி அன்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளார்.
இந்நிலையில் மு க ஸ்டாலின், “செய்தித் தாட்கள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங்களில் பணி புரிவோர் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள். இவர்கள் அனைவரும் மழை, வெயில், பெருந்தொற்று என எதையும் பொருட்படுத்தாமல் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றுகின்றனர்.
எனவே இவர்கள் அனைவருக்கும் இனி முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் மற்றும் சலுகைகள் உரிய முறையில் வழங்கப்படும் ” என அறிவித்துள்ளார். இது பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
[youtube-feed feed=1]