சென்னை

பாஜக மாநில சுயாட்சியைப் பறிப்பதாகத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.

 =முதல்வர் மு க ஸ்டாலின் பேசும் ‘ஸ்பீக்கிங் பார் இந்தியா பாட்காஸ்ட்’ சீரிசின் 3வது ஆடியோ வெளியாகி உள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த ஆடியோவில்,

”இந்தியா என்பது கூட்டாட்சி தன்மை கொண்ட நாடு. பல்வேறு அழகிய மலர்கள் நிரம்பிய அற்புதமான பூந்தோட்டம். முதல்வராக இருந்தபோது மாநில உரிமை பற்றிப் பேசிய மோடி, பிரதமரான பின் மாநில உரிமைகளைப் பறிக்கிறார். 

மாநிலங்களை ஒழிக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது. சிஏஜி மூலம் பாஜகவின் ஊழலை அம்பலப்படுத்திய அதிகாரிகளை விரைவாகக் கூண்டோடு மாற்றியுள்ளது பாஜக அரசு. இந்திய ஜனநாயக அமைப்பைச் சிதைக்கிறது பாஜக.  

மாநிலங்களைக் காப்போம், இந்தியாவைக் காப்போம், இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைப்போம். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி இதுதான் உண்மையான ஜனநாயகம் ” 

என்று கூறியுள்ளார்.