சென்னை

ருணாநிதிக்கு மீண்டும் அண்ணாசாலையில் சிலை வைக்கப்படும் எனத்  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் மு கருணாநிதிக்குச் சிலை வைக்கப்பட்டிருந்தது.   அப்போதைய முதல்வர் எம் ஜி ஆர் மரணத்தின் போது அந்த சிலை உடைக்கப்பட்டது.   மிண்டும் ஆட்சியைப் பிடித்த கருணாநிதி தமக்குச் சிலை வைக வேண்டாம் எனக் கூறி தடுத்து விட்டார்.  இந்நிலையில் சட்டப்பேரவையில் அரசு சார்பில் அண்ணாசாலையில் மீண்டும் கருணாநிதிக்குச் சிலை வைக்கக் கோரிக்கை விடப்பட்டது.

திமுக சட்டப்பேரவை  உறுப்பினர் நீலமேகம் விடுத்த இந்த கோரிக்கைக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் பதில் அளித்தார்.  மு க ஸ்டாலின் தனது பதிலில், “சென்னை அண்ணாசாலையில் சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை பெற்று மீண்டும் கருணாநிதிக்குச் சிலை வைக்கப்படும்” எனத் அறிவித்துள்ளார்.

மேலும் அவர், “அண்ணா மற்றும் பெரியாருக்குப் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.  அதைப் போல் கருணாநிதிக்கும்  அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் உண்டாகாத வகையில் மீண்டும் சிலை வைக்கப்படும்” எனக் கூறி உள்ளார்.