
சென்னை:
தனக்குப் பக்கபலமாக விசிக தலைவர் திருமாவளவன் இருக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பிரபல தொழிலதிபர் என்.ஆர். தனபாலனின் தயார் நேசம்மாள் படத் திறப்பு நிகழ்வு சென்னை உள்ள பெரியார் திடலில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “மாற்றம் வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசி வருகிறார். அவர் எநக்கு பக்க பலமாக இருக்க வேண்டும்” என்றார்.
மேலும், “அப்துல் கலாம் நினைவிடத்தில் பகவத் கீதை இடம்பெறுவது மதவாதத்தைத் திணிக்கும் செயல். உலக புகழப்பெற்ற திருக்குறள் அப்துல் கலாம் நினைவிடத்தில் இடம் பெறாதது ஏன்” என்ற கேள்வியையும் எழுப்பினார்.
ஸ்டாலின் விடுத்த அழைப்பு குறித்து திருமாவளவனிடம் கருத்து கேட்ட போது, “மக்கள் பிரச்சனைகளுக்காக திமுகவுடன் இணைந்து செயல்படுவதில் எந்தவித சங்கடமும் இல்லை” என்றார்.
மேலும் அவர், “கூட்டணி பற்றி, தேர்தல் நேரத்தில் ஏற்படும் சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும்” என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.
தி.மு.க.வைப் பொறுத்தவரை அதன் தலைவர் கருணாநிதி, திருமாவளவனுக்கு அனுசரணையாக இருப்பதாகவும் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அப்படி இல்லை என்றும் செய்திகள் உலாவந்தன.
இந்த நிலையில் மு.க. ஸ்டாலின், திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]