சென்னை
இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்து முன்னணி தலைவர் ராம கோபாலனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி ஆனது.
94 வயதாகும் ராம கோபாலன் சிகிச்சை பலனின்றி இன்று உயிர் இழந்தார்.
அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவ்வகையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் டிவிட்டரில்.
”ஆன்மீகச் சிந்தனையுடன், சமயக் கருத்துகளைச் சமுதாயத்திற்கு எடுத்துரைத்த துறவியயான ராம.கோபாலன் மறைவு பேரிழப்பாகும்;
சித்தாந்த வேறுபாடுகள் எத்தனையோ இருந்தாலும், கருணாநிதியும், ராம. கோபாலனும் நல்ல நண்பர்களே!”
என இரங்கல் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]