9 ரன்களில் 9 வீராங்கனைகளை ஆவுட்டாக்கி மத்தியப்பிரதேச அணி இமாலய வெற்றிப்பெற்றுள்ளது. இந்த வெற்றி உலகளவில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

wickets

புதுச்சேரிச்சேரியில் நடந்த பெண்களுக்கான டி20 போட்டியில் மத்தியப்பிரதேசம் மற்றும் மிசோரம் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மிசோரம் அணி 9 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணி சார்பில் களமிறங்கிய வீராங்கனைகள் ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட் ஆகினர்.

5வது ஆக களமிறங்கிய அபூர்வா பரத்வாஜ் ஒரு பவுண்ட்ரி உட்பட 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு மத்திய பிரதேச அணியின் பந்து வீச்சாளர்களின் வொய்டு பந்தினால் மிசோரம் அணிக்கு 3 ரன்கள் கூடுதலாக கிடைத்தது. இதனை தொடர்ந்து 9 ரன்களே எடுத்த நிலையில் மிசோரம் அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.

இதையடுத்து 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சொற்ப இலக்குடன் மத்தியப்பிரதேச அணியின் வீராங்கனைகள் களமிறங்கினர். ஒரு ஓவரிலேயே தங்கள் இலக்கை எட்டிய மத்தியப் பிரதேச 10 விக்கெட் வித்யாசத்தில் மிசோரம் அணியை வீழ்த்தி இமாலய வெற்றியை பதிவு செய்தது. இதேபோன்று கடந்த 20ம் தேதி கேரளாவுக்கு எதிரான போட்டியில் விளையாடிய மிசோரம் அணி 24 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உலகிலேயே 9 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளும் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தது இதுவே முதல் முறை. இதற்கு முன்னதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற மகளிர் டி20 போட்டியில் சீனாவை சேர்ந்த மகளிர் அணி 14 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.