
கொரோனா லாக்டவுனில் பல சினிமா பிரபலங்கள் திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில் நடிகை மியா ஜார்ஜூக்கும் திருமணம் நடந்துள்ளது .
மலையாளத்தில் ஒரு ஸ்மால் ஃபேமிலி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் மியா ஜார்ஜ். 2014-ம் ஆண்டு ‘அமர காவியம்’ என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
சில மாதங்களுக்கு முன்பு, கேரளாவைச் சேர்ந்த அஷ்வின் ஃபிலிப் என்கிற தொழிலபதிருடன் மியா ஜார்ஜுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
சில தினங்களாகவே திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள் நடைபெற்று வந்தன. இன்று (செப்டம்பர் 12) எர்ணாகுளத்தில் உள்ள கிறிஸ்துவ தேவலாயத்தில் மதியம் 2:30 மணியளவில் அஷ்வின் ஃபிலிப் – மியா ஜார்ஜ் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் யூடியூப் தளத்தில் நேரலை செய்யப்பட்டது.
Patrikai.com official YouTube Channel