டெல்லி: இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விண்வெளியில் இன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது.. ‘ஸ்கைரூட் ஏர் ஸ்பேஸ்’ எனும் தனியார் நிறுவனம் இந்த ராக்கெட்டை தயாரித்துள்ளது. ‘விக்ரம்-எஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ராக்கெட் இரண்டு இந்திய செயற்கைக்கோள் மற்றும் ஒரு வெளிநாட்டு செயற்கைக்கோள் களை விண்ணிற்கு கொண்டு செல்கிறது.

இந்திய விண்வெளி துறையில் முதன்முதலாக இன்று ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு தளத்தல் இருந்து  முதல் தனியார் ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. விண்வெளி துறையில் அந்நிய நேரடி முதலீடு வரவேற்பளிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்த நிலையில் இந்த ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் ஏவியுள்ளது.

ஏற்கனவே பல்வேறு வகையான ராக்கெட்டுக்களை விண்ணில் ஏவி, உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில், நிலவுக்கும் ராக்கெட்டை அனுப்பி சாதனை செய்த இஸ்ரோ, தற்போது,  தனியார் ராக்கெட்டுகளை விண்ணில் ஏவவும் தயாராகி உள்ளது. அதன் முதல்கட்டமாக, இன்று  ‘ஸ்கைரூட் ஏர்ஸ்பேஸ்’ எனும் தனியார் நிறுவனம் இந்த ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டள்ளது.

இந்தியாவில் தனியார் நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் பங்களிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த திட்டத்திற்கு ‘பிரரம்ப்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஒட்டுமொத்த திட்டத்திற்கு ரூ.403 கோடி ரூபாய் நிதியுதவி பெறப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த திட்டத்திற்கு ‘விக்ரம் சாராபாய்’ நினைவாக ‘விக்ரம்’ என பெயரிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த ஸ்கைரூட் ராக்கெட் விண்வெளியின் துணை சுற்றுப்பாதையில் பயணிக்கும்.

இதையடுத்து, ‘விக்ரம்-I’ எனும் மற்றொரு ராக்கெட்டை விண்ணில் செலுத்த திட்டமிட்டு உள்ளதாகவும், இதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளன” என்று இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஸ்கைரூட் இணை நிறுவனரும், சிஓவுமான நாகா பரத் தாகா இத்திட்டம் பற்றி கூறுகையில், “இந்த ராக்கெட் 3 செயற்கைக்கோள்களை எடுத்துச்செல்கிறது. ஆனால் இதன் நோக்கம் மற்றும் எந்த நிறுவனங்கள் சார்பில் இது விண்ணுக்கு அனுப்பப்படுகின்றன என்பது குறித்த தகவல்களை வெளிப்படையாக சொல்ல முடியாது. ராக்கெட்டின் தனிச்சிறப்பு குறித்து சொல்வதெனில், இது முழுக்க முழுக்க திட எரிபொருளை கொண்டு இயங்கும்.