டெல்லி:

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஈரானில் சிக்கித் தவிந்துவந்த இந்தியர்களை விமானத்தில் ஏற்றிய அனுப்பிய பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய ஈரான் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்  “மிஷன் முடிந்தது” என்று தெரிவித்து உள்ளர்.

இந்த நிலையில், முதல்கட்டமாக ஈரானிலிருந்து வெளியேறிய  58 இந்தியர்கள் ஐ.ஏ.எஃப். விமானத்தில் தாயகம் திரும்பினர்.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், ஈரானிலும் கொரோனா வெகு வேகமாக பரவி வருவதால், அங்கு சிங்கியிருந்த இந்தியர்களை மீட்க இந்தியா உதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஈரானில் தற்போதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 237 பேர் பலியாகி உள்ளனர். 7 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணி நிமித்தமாகவும், பலர் அங்கேயே குடியிருந்து வருவாகவும் கூறப்படுகிறது. இதில் பலர், தங்களை  மீட்க வேண்டும் என்று  வேண்டுகோள் விடுத்தனர்.

அதனப்டி, உத்தரபிரதேச மாநிலம் ஹிண்டன் விமானப்படை தளத்தில் இருந்து சி-17 குளோப்மாஸ்டர் என்ற விமானம் நேற்று இரவு 8.30 மணிக்கு ஈரான் புறப்பட்டது. அந்த விமானத்தில் மருத்துவ குழுவினரும் சென்றனர்.

அந்த விமானம், ஈரானின்ல இருந்து முதற்கட்டமாக 58 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு இன்று காலை இந்தியா திரும்பியது.,டெல்லியில் இருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ள காஜியாபாத்தில் தரையிறங்கியது. அதைத் தொடர்ந்து அவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று சோதனை நடைபெற்றது.

இதை  இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது டிவிட்டர் பதிவில் உறுதிபடுத்தி உள்ளார். மேலும்,  ‘ சவாலான நேரத்தில் பணியாற்றிய ஈரானில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் மருத்துவ குழுவினருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய விமானப்படைக்கும் நன்றி. ஈரான் அதிகாரிகளின் ஒத்துழைப்பும் பாராட்டுக்குரியது. ஈரானில் இன்னும் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக பணியாற்றி வருகிறோம்’ எனத்தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம்  27ம் தேதி 76 இந்தியர்களை  சீனாவின் வுஹான் நகரிலிருந்து ஐஏஎஃப் விமானம் தாயகத்துக்கு அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.