சென்னையில் விடுபட்ட இடங்களில் மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் அடுத்த மாதம் துவங்கும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

பெருங்குடி, சோழிங்கநல்லூர், மாதவரம் ஆகிய மண்டலங்கள் தவிர ஆனந்த் நகர் ஆகிய இடங்களில் மழைநீர் வடிகால்கள் அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து, 2025ம் ஆண்டு வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக மழை நீர் வடிகால் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

சென்னையில் மழை நீர் வடிகால் இல்லாத இடங்களில் வடிகால் இணைப்பு பணிகள் அடுத்த மாதம் துவங்கும் என்றும் இந்த பணிகள் 10 மாதத்தில் முடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தவிர, சாலைகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற நிறுத்திவைக்கப்பட்டுள்ள டிராக்டர் பம்புகளுக்கான ஆர்டர்கள் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.