கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு தலையில்லாமல் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு ஆணின் உடல் கிடந்தது.

இதுபற்றி கேஷ்வாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ‘மிஸ் கர்நாடகா’ அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவரும், நடிகையுமான ஷான்யா காடவேயின் அண்ணன் ராகேஷ் என்பது தெரியவந்தது.

நடிகை ஷான்யா தனது மேலாளர் நியாஜ் அகமது என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இது ஷான்யாவின் அண்ணன் ராகேஷுக்கு பிடிக்கவில்லை.

இதனால் கூலிப்படையை ஏவி ராகேஷை கொலை செய்துள்ளனர். தற்போது நடத்தப்பட்ட விசாரணையில் உண்மை தெரிய வர, தற்போது ஷான்யா, அவரது காதலன் நியாஜ் அகமது, கூலிபடையினர் என கூண்டோடு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

[youtube-feed feed=1]