ஸ்ரேலில் நடைபெற்ற 70வது மிஸ் யூனிவெர்ஸ் போட்டியில் இந்தியாவின் ஹர்னாஸ் சாந்து பிரபஞ்ச அழகியாக தேர்வானார். ஏற்கனவே கடந்த 2000ம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த லாரா தத்தா மிஸ் யுனிவர்சாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், 21 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்தியாவைச் சேர்ந்த சாந்து மிஸ் யுனிவர்சாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

79 பேர் கலந்துகொண்ட இந்தப்போட்டியில் பராகுவே-வை சேர்ந்த நாடியா பெரைரா இராண்டாவது இடத்தையும் தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த லாலீலா ம்ஸ்வான் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

சண்டிகரில் பிறந்த 21 வயதாகவும் பிரபஞ்ச அழகி ஹர்னாஸ் சாந்து 2019 ம் ஆண்டு மிஸ் பஞ்சாப் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் ஐலட் நகரில் நடைபெற்ற 2021 ம் ஆண்டுக்கான இந்த பிரபஞ்ச அழகிப் போட்டியில் முதல் முறையாக ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த அழகி கலந்து கொண்டார்.

[youtube-feed feed=1]