திரையுலகில் ஷங்கர் இயக்குநராக அறிமுகமாகி 25 ஆண்டுகள் கடந்துவிட்டன.
இயக்குனர் ஷங்கரின் 25 ஆண்டுகால திரை பயணத்தை கொண்டாடும் வகையில் சமீபத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் ஒன்று கூடி விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
இயக்குனர் மிஸ்கின் தனது அலுவலகத்தில் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் கலந்துக் கொண்ட அனைத்து இயக்குனர்களும் நீல நிறத்தில் டி-ஷர்ட் அணிந்திருந்தனர். அதில் S25 என குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்போது ‘சைக்கோ’ படம் தொடர்பாக மிஷ்கின் அளித்துள்ள பேட்டியில், ஷங்கருக்கான கொண்டாட்டம் தொடர்பாகப் பேசியுள்ளார்.
ஷங்கர் சார் 25 ஆண்டுகள் கொண்டாட்டத்துக்கு அடுத்த நாள் மணி சார், “திரும்ப ஸ்கூலுக்குப் போனது மாதிரி இருந்தது. அவ்வளவு ஜாலியாக இருந்துச்சு மிஷ்கின்” என்று மெசேஜ் பண்ணியிருந்தார். அதுதான் தேவை. திரும்பவும் அனைவரையும் குழந்தைகள் ஆக்குகிறேன். ஷங்கர் சாருக்காக ஒரு பாடல் ஒன்றையும் உருவாக்கி அந்த நிகழ்வில் பாடினேன்.
அந்தப் பாடல் வரிகள்
கனவுல றெக்க முளைச்சு பறக்குது உன்னால…
நினைவுல வேர் முளைச்சு வளருது மரமாக…
விடுகதையா வாழ்வு இங்கு கேள்வி கேட்குது…
பெரும் கதையா நீ சொல்ல.. வாழ்க்கை இனிக்குது…
இவ்வாறு மிஷ்கின் தெரிவித்துள்ளார்.