‘மாயநதி’, ‘ஃபாரன்ஸீக்’, ‘தீவண்டி’, ‘வைரஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் டொவினோ தாமஸ். ‘மாரி 2’ படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடித்துள்ளார்.

இந்நிலையில் பாசில் ஜோசப் இயக்கத்தில் ‘மின்னல் முரளி’ படத்தில் டொவினோ தாமஸ் நடித்து வருகிறார்.

இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தை வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் தயாரிக்கிறது.

இப்படத்தில் ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய விலாட் ரிம்பர்க் சண்டைப்பயிற்சி இயக்குநராகப் பணியாற்றுகிறார். ஷான் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்துக்கு சமீர் தாஹீர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

[youtube-feed feed=1]