மலையாளத்தில் சூப்பர் ஹீரோ திரைப்படமாக தயாராகியிருக்கும் மின்னல் முரளி திரைப்படத்தில் மின்னல் முரளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்நடிகர் டொவினோ தாமஸ்.
இப்படத்தை இயக்குனர் பாசில் ஜோசப் இயக்கியுள்ளார். வீக்எனட் ப்ளாக்பஸ்டர்ஸ் நிறுவனம் தயாரிக்க, நடிகர்கள் குரு சோமசுந்தரம், அஜு வர்கீஸ், ஹரிஸ்ரீ அசோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.
மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் வெளியாகும் மின்னல் முரளி திரைப்படம் நேரடியாக நெடஃபிலிக்ஸ் OTT தளத்தில் வருகிற செப்டம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.