சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி அமைச்சர் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், காங்கிரஸ் மூத்த தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்வோன், முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நாம் தமிழர் கட்சி தலைவவர் சீமான், நடிகை குஷ்பு மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பல தலைவர்கள், அதிகாரிகள், பொதுமக்கள்  தங்களது ஜனநாயக கடமையை செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் உள்ளிட்ட 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.  தமிழகம் முழுவதும் 30,785 வாக்குச்சாவடிகளில் 2.83 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன், வேலூர் காட்டாபாடி வாக்குச்சாவடியை தனது வாக்கினை செலுத்தினார்.

தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை கிண்டியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயாக கடமையை செய்தார்.

அதிமுக எம்எல்ஏ, கே.பி. முனுசாமி கிருஷ்ணகிரியில் உள்ள வாக்குச்சாவடியில் பொதுமக்களுடன் வரிசையில் வந்து தனது வாக்கினை செலுத்தினார்.

சென்னை ஆலப்பாக்கம் வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது வாக்கினை செலுத்தினார்.

கோவை சுகுணாபுரத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது வாக்கினை செலுத்தினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மூத்த தலைவருமான இவிகேஎஸ் இளங்கோவன், ஈரோடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.

நடிகை குஷ்பு சென்னை மந்தைவெளி 126 வார்டின் தனது வாக்கினை செலுத்தினார்.

தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.