சென்னை: சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. முன்னதாக ஓபிஎஸ் இருக்கை விவகாரம், ஆளுநருக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் செயல்படுவதை கண்டித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டமன்றம் வருகை தந்தனர்.
பேரவை கூடியதும் சட்டமன்ற பேரவை முன்னாள் உறுப்பினர் புருஷோத்தனம் மறைவிற்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பிறகு கேள்வி நேரம் தொடங்கியது.
பின்னர் பூஜ்ய நேரத்தில், எதிர்கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு, அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, சாமிநாதன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி, சேகர்பாபு, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பதிலளித்தனர்.
இந்த ஆண்டின் முதல் கேள்வியைக் கேட்ட அதிமுக எம்.எல்.ஏ ஆர்.பி. உதயகுமார் எழுப்பினார். மதுரை திருமங்கலம் நகராட்சிக்கு பாதாளச் சாக்கடை திட்டத்தினை விரைவில் நடைமுறை வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, திருமஙகலம் நகராட்சி உள்பட மதுரைக்கு ரூ. 500 கோடி செலவில் பாதாளச் சாக்கடைத் திட்டம் நடைமுறை படுத்தப்படவுள்ளன கூறினார்.
பழனி தொகுதி கொடைக்கானல் பகுதியில் ஆண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்க அரசு முன்வருமா என பழனி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஐ.பி.செந்தில் குமார் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, “மலைப் பகுதியில் வாழ்கிற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்கள் முறையாக கல்வி பெறும் வகையில முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
என்றாலும் பழனி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அரசு கலைக் கல்லூரிகள் இருப்பதால் கல்லூரிகள் தொடங்குவதற்கு வாய்ப்பு இல்லை” என்று குறிப்பிட்டார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 31 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அப்போது இடையே பேசிய சபாநாயகர் அப்பாவு, “31 கல்லூரிகள் தொடங்கி இருப்பதாக கூறுகிறீர்கள். ஆனால் எனது தொகுதியில் ஒரு கல்லூரி கூட தொடங்கவில்லை. நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறேன்”, என்றார்.
இதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த அமைச்சர் பொன்முடி, “நீங்களும் நீண்ட நாட்களாக கேட்டு வருகிறீர்கள். இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நிதி ஒதுக்கீடு செய்து, உங்கள் தொகுதியிலும் கல்லூரி தொடங்க முதலமைச்சரிடம் அறிவுறுத்தப்படும்” என்றார்.
நாககப்பட்டினம் செல்லூர் அரசு கல்லூரிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா என திமுக கூட்டணி கட்சி எம்எல் ஷாநவாஸ் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, அரதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் எனவும், மற்ற கல்லூரிகள் அனைத்திற்கும் அடிப்படை வசதிகள் அமைத்து தரப்படும் எனவும் பதில் அளித்துள்ளார்.
கீழடி வழியே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சப்-வே அமைத்து தரவேண்டும் தமிழரசி எம்.எல்.ஏ கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு, தேசிய நெடுஞ்சாலை என்பதால், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்து கடிதம் எழுதப்பட்டுள்ளது, பதில் கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அடிளத்தார்.
கந்தர்வகோட்டை தொகுதியில் முந்தரி தோப்பு அமைக்கப்படுமா எம்எல்ஏ சின்னத்துரை கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதில் கூறிய தொழில்த்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தற்போது இந்தமாதிரி திட்டம் அரசிடம் இல்லை, தனியார் நிறுவனங்கள் முன்வந்தால் அரசு அதற்கு துணை நிற்கும் என கூறினார்.
மற்றொரு உறுப்பினர் கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு, . தமிழ்நாட்டில் இரண்டாம் கட்ட நகரங்களில் ஐ.டி ஹப்கள் நிறுவ அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என கூறினார்.
திண்டிவனம் – மரக்காணம் பகுதியில் சார் நிலைக்கருவூலம் அமைக்கப்படுமா என அந்த தொகுதி எம்எல்ஏ எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர், பழனிவேல் தியாகராஜன் திண்டிவனம் – மரக்காணம் பகுதியில் சார் நிலைக்கருவூலம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
பண்ணாரி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் எப்போது அமைக்கப்படும் என கோபிச்செட்டி பாளையம் தொகுதி அதிமுக எம்எல்ஏசெங்கோட்டையன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, ராஜகோபுரம் அமைக்கும் பணிக்கான டெண்டர் கோர யாரும் முன்வரவில்லை என பதில் அளித்துள்ளார்.
ஜெயம்கொண்டம் தொகுதியில் சோலார் அமைக்க வேண்டும் என அந்த தொகுதி எம்எல்ஏ கண்ணன் கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதில் கூறிய அமைச்சர் செந்தில்பாலாஜி , தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளும் சோலார் திட்டம் அமைக்கப்படவுள்ளது என கூறினார்.
ராமேஸ்வரத்தில் விடப்படும் வடமாநில முதியவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என அந்த தொகுதி எம்எல்ஏ முத்துராமலிங்கம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் கீதா ஜீவன், ராமேஸ்வரத்தில் ஆதரவற்று வாழும் குழந்தைகள், பெரியவர்கள் தங்கும் வகையில் ஒருங்கிணைந்த வளாகம் அமைக்க தொண்டு நிறுவனங்கள் முன்வரும்போது அரசு மானியம் வழங்க முன்வரும் என கூறியதுடன், ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாரால் 6 முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது என்றார்.
காரைக்குறிச்சி அருணாச்சலத்துக்கு மணிமண்டபம் அமைக்கப்படுமா அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் கூறிய செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன். நாதஸ்வர வித்துவான் காரைக்குறிச்சி அருணாச்சலம் மற்றும் இந்திய துணைக் கண்டத்தின் கடைசி ஜமீன் சிங்கம்பட்டி ஜமீனுக்கு மணிமண்டபம் அமைப்பது குறித்து அரசின் நிதிநிலையைப் பொறுத்து எதிர்காலத்தில் முடுவு எடுக்கப்படும் என கூறியுள்ளார்.