காஞ்சிபுரம்

மைச்சர் தா மோ அன்பரசன் இன்னும் 10 நாட்களில் உதயநிதி துணை முதல்வராவார் எனத் தெரிவித்துள்ளார்.

வருகிற 28 அம் தேதி தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி திடலில் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டம் குறித்த முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, க.பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எம்.பி.க்கள் திருச்சி சிவா, ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் பவள விழா பொதுகூட்ட நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியதாக தெரிகிறது. திமுக இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு உதயநிதி ஸ்டாலின், துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக தொடர்ந்து வெளியாகி வரும் திடீரென நடத்தப்பட்ட இந்த கூட்டம் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. .

சென்னையில் நடந்த தி.மு.க. பவள விழாவில் பேசிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தத்ல் தி.மு.க.வில் மீண்டும் இந்த பேச்சு எழ தொடங்கியது.

இன்று காஞ்சிபுரத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் செய்தியாளர்களிடம,

“அடுத்த 10 நாட்களில் அமைச்சர் உதயநிதி துணை முதல்-அமைச்சராக அறிவிக்கப்படுவார்.  நாளை கூட அறிவிப்பு வெளியாகலாம். இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும்.10 நாட்களில் துணை முதல்-அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பார்”

என்று கூறியுள்ளார்.