சென்னை: 
குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து புதுவை அரசு சமீபத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. புதுவையில் பள்ளிகள் நேற்று முதல் செப்டம்பர் 25-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதுவையை போல் தமிழகத்திலும் குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக காய்ச்சல் அதிகரித்து வருகிறது என்பதும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்த நிலையில் புதுவையை போல் தமிழகத்திற்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் தொடர்ச்சியாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும் என்றும் நோயின் தன்மையை ஆராய்ந்து அதன் பின் தான் ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.

தற்போது பரவிவரும் காய்ச்சலால் பலரும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கூறினாலும் இது குறித்து பள்ளி கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை ஆய்வு செய்து ஒரு முடிவை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.