சென்னை: சென்னையில், ரூ. 417 கோடி மதிப்பில், 6 மாடி கட்டிடத்துடன் கூடிய குழந்தைகளுக்கு உயர்சிகிச்சைக்கான பிரம்மாண்ட மருத்துவமனை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
ரூ. 417 கோடி மதிப்பீட்டில் 6.5 ஏக்கர் நிலப்பரப்பில் 6 மாடிகளைக்கொண்ட கட்டித்தில், குழந்தைகளுக்காக பிரம்மாண்ட மருத்துவமனையை தமிழக அரசு அமைக்கவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. கிண்டி, கிங் நிலைய வளாகத்தில் குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை (ம) ஆராய்ச்சி நிலையம் அமைகிறது.

தமிழக அரசு மக்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், சென்னை, கிண்டியில், 6.50 ஏக்கர் பரப்பளவில் ரூ.417.07 கோடி மதிப்பீட்டில் இந்தியாவிலேயே முதன்முறையாக குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டடம் அமையவுள்ளது.
கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை மிகப் பெரிய அளவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு மிகப் பெரிய அளவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதே மருத்துவமனை வளாகத்தில் இந்தியாவின் பிரத்யேகமான வயது மூத்தவர்களுக்கு என்று மருத்துவமனை பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நிலையில் உலகிலேயே முதன்முறையாக உலகத் தரம் வாய்ந்த குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் ரூ.417.07 கோடி மதிப்பீட்டில் அமையவிருக்கிறது. இம்மருத்துவமனைக்கு இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி உள்ளார்.
இம்மருத்துவமனையில் 6 தளங்களுடன் கூடிய மருத்துவமனை கட்டடம். 3,37,990 சதுரஅடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 5 தளங்களுடன் கூடிய முதுகலை பட்டதாரிகள் மற்றும் செவிலியர்கள் குடியிருப்பு கட்டடம், 78,220 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 5 தளங்களுடன் கூடிய பேராசிரியர்களுக்கான குடியிருப்பு கட்டடம். 17.010 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் ஒரு தளத்துடன் கூடிய உணவகம் மற்றும் கூடுதல் வசதி கட்டடம், 30,324 சதுர அடி பரப்பளவு என்று ஆக மொத்தம் 4,63,544 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்ட மருத்துவமனை கட்டப்படவிருக்கிறது.

6.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமையப் பெறவிருக்கின்ற இந்த மருத்துவமனை உலகளவில் குழந்தைகளுக்காக உருவாக்கப்படுகின்ற பிரத்யேகமான ஒரு மருத்துவ மனை. இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, புற மருத்துவ பயனாளிகள் பிரிவு, குழந்தைகளுக்கான நாளமில்லா சுரப்பி வார்டு, நுரையீரல் சிகிச்சை வார்டு. டயாலிசிஸ் வார்டு, இருதய சிகிச்சை பிரிவு, நரம்பியல் சிகிச்சை பிரிவு, எலும்பியல் சிகிச்சை பிரிவு, இரத்தவியல் பிரிவு, இரைப்பை குடல் அறுவை சிகிச்சை பிரிவு, சிறுநீரகவியல் பிரிவு, ஒட்டுறுப்பு சிகிச்சை பிரிவு, ஆராய்ச்சி ஆய்வகம் என்று பல்வேறு வகைகளிலான சிறப்புமிக்க பிரிவுகள் இம்மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட உள்ளது. நிர்வாக அலுவலகம், இரத்த வங்கி காப்பகம், மயக்க மருந்தியல் பிரிவு, அறுவை சிகிச்சை அரங்குகள்,
கேத்லேப் ஆய்வகம், அறுவை சிகிச்சைக்கு பிந்தைய வார்டு, அதிதீவிர சிகிச்சை பிரிவு, எலும்பு மஜ்சை மாற்று அறுவை சிகிச்சை பிரிவு என்று பல்வேறு வகைகளில் அதிநவீன மருத்துவ வசதிகள் இம்மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட உள்ளது. இம்மருத்துவமனை 18 மாத காலத்திற்குள் இக்கட்டிடப் பணிகள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]