சென்னை

மிழகத்தில் பைக் டாக்சி  இயக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

நேற்111 சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையரக அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள், கால்டாக்சி ஓட்டுனர்கள் சங்கத்தினருடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தொ.மு..ச, சி.ஐ.டி.யு. உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்றன.

தொழிற்சங்க நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் அவர்கள் வலியுறுத்தினர். தமிழக முதல்வரிடம் இது தொடர்பாக கலந்து பேசி நல்ல முடிவை அறிவிப்பதாக அமைச்சர் சிவசங்கர் கூட்டத்தில் தெரிவித்தார்.

பிரகு அமைச்சர் செய்தியாளர்களிடம்,

 “சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (கும்டா) மூலமாக வாடகை வாகனங்களுக்கான செயலியை (ஆப்) செயல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆட்டோ கட்டணம் தொடர்பாக முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

மஞ்சள் நிற பலகை பொருத்தி உரிய உரிமத்துடன் பைக் டாக்சி இயக்கப்படுவது குறித்து மத்திய அரசின் விதிகளை பரிசீலித்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்”

என்று கூறியுள்ளார்