சென்னை
நேற்று திமுக கூட்டணி கட்சிகள் ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய அரசை எதிர்த்து ஆர்ப்பாடம் நடத்தி உள்ளனர்.
மத்திய கல்வி அமைச்சர் மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால் தான் தமிழகத்திற்கு நிதி தருவோம் என்று கூறியதற்கு தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மத்திய பட்ஜெட், மும்மொழி கொள்கை, யு.ஜி.சி. விதி என எல்லாவற்றிலும் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவதாகவும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் தெரிவித்து வந்தன.
எனவே நேற்று மாலை தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே தி.மு.க. கூட்டணி கட்சியினர் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், தி.க.., வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. மேலும் முஸ்லீம் லீக், ம.நீ.ம., ம.ம.க., கொ.ம.தே.க., த.வா.க. உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தமிழகத்தின் உரிமைகளைச் சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய பா.ஜ.க. அரசு எடுத்து வருவதாக கூறி கண்டனம் தெரிவித்தனர்.
இந்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை டேக் செய்து, உரிமைகளை வென்றெடுக்கும் தீரர்கள் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.