கோபி:
98.5% மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்துள்ளனர் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் குடிநீர் மற்றும் சாலை திட்ட பணிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் இன்று பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:
இன்றைய சூழ்நிலையில் 6,7,8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்றும் தற்போது 98.5% மாணவர்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருக்கின்றனர் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், 6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
10,12-ம் வகுப்பு பொது தேர்வு அட்டவணைகள் வெளியிடுவது குறித்து முதல்வர் முடிவு செய்து பள்ளிகல்வித்துறை ஆலோசனையுடன் அட்டவணைகள் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.