சென்னை

பாஜகவின் என் மண், என் மக்கள் என்னும் பிரசாரம் எடுபடவில்லை என தமிழக அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்

இன்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அமைச்சர் சேகர் பாபு.

“என் மண் என் மக்கள் என்னும் பாஜகவின் எடுபடவில்லை. எனவே வேறி ஏதேனும் ஒரு பிரச்சினையைக் கையில் எடுக்கிறார்கள். நமது ஆட்சி சமத்துவத்திற்கான ஆட்சி.

ஏனெனில் தி.மு.க.வின் கொள்கையே சமத்துவம் தான். சமூகத்தில் சனாதனம் ஒரு பக்கம் என்றால், சமத்துவம் மறுபக்கம்.

எனவே இதை பற்றிப் பேச அனைத்து அமைச்சர்களுக்கும் உரிமை உண்டு. எங்கள் பணியின் வேகத்தை உருட்டல், மிரட்டல்கள் மூலம் குறைக்க முடியாது.”

என்று கூறி உள்ளார்.