சென்னை
தமிழக அமைச்சர் ராஜ கண்ணப்பன் அமெரிக்கர்கள் ஆவின் நெய்யை விரும்புவதக தெரிவித்துள்ளார்.
இன்றைய தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம்,
”ஆவின் பொருட்கள் சிறிய கிராமங்களில் விறபனை செய்ய முடியாத சூழல் உள்ளது. அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’
என்று கேள்வி எழுப்பினார்
அமைச்சர் ராஜ கண்ணப்பன்,
“தமிழகம் முழுவதும் 300 கூட்டுறவு நிலையம் உள்ளது. இந்த வருடம் அதிகமாக கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆவின் நெய் உலகத்தரம் வாய்ந்தது. அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
விலை கூடுதலாக இருந்தாலும் அமெரிக்கர்கள் ஆவின் நெய் தான் விரும்புகிறார்கள். ஆவின் பொருட்கள் கிராமங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்”
என்று தனது பதிலில் தெரிவித்துள்ளார்.