புதுக்கோட்டை
அமைச்சர் ரகுபதி உச்சநீதிமன்றம் தமிழக ஆளுநரைக் கண்டித்துள்ளதாக கூரி உள்ளார்.
தமிழக ஆளுநர் பொன்முடி மீண்டும் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.இன்று வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆளுநருக்குச் சரமாரியாகக் கேள்வியை எழுப்பியது. ஆளுநர் நாளைக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆளுநரின் செயல்பாடுகள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் காட்டமாக விமர்சித்தது.
நேற்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம்,
”சட்டசபை உறுப்பினர்கள் எவரும் அமைச்சர் ஆகலாம். அதற்கென்று தனி தகுதி எதுவும் தேவையில்லை. ஒருவர் அமைச்சர் ஆக முடியாது என்ற தகுதி இழப்பு விதி எதுவும் இல்லை. சட்டசபை உறுப்பினர் ஆகிவிட்டாலே ஆவர் அமைச்சராவதற்கு முழு தகுதி பெற்றுவிட்டார்.
எனவே அந்த அடிப்படையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநரிடம் பரிந்துரை செய்தார். நம் ஆளுநர் தான் உலக மேதாவி ஆயிற்றே? அதனால் சட்ட வல்லுநர்களை கேட்கிறேன் எனக் கூறினார்.
இறுதியாக ச்சநீதிமன்ரம் ஆளுநருக்குக் குட்டு வைத்துள்ளது. ஆளுநரின் செயல்பாடுகளை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரே நியாயப்படுத்தாமல் அவரது செயல்பாடுகள் கவலை அளிக்கிறது என ஒப்புக்கொள்கிறார். இந்த அளவு மோசமான ஆளுநரால் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ? மக்கள் இதையெல்லாம் நிச்சயமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்’
எனத் தெரிவித்துள்ளார்.